சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டரை தொழிலாளர் சங்கம் சார்பில், கைத்தறி நெசவாளர்களுக்கு 25 சதவீத கூலி உயர்வு மற்றும் பஞ்சப்படி வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கடலூரை அடுத்துள்ள கே.என்.பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் இ.தயாளன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், கைத்தறி சங்க மாவட்ட தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, செயலர் வி.ரெங்கநாதன், பொருளர் ஆர்.கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் ஜி.கணேசன், ஏ.பஞ்சநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தில் நெசவாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பசுமை வீடு திட்டத்தின் கீழ், அரசே வீடுகட்டி கொடுக்க வேண்டும். பெண் நெசவாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50-ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai