சுடச்சுட

  

  சிதம்பரத்தில் பிடிபட்ட ஒன்றரை அடி நீள முதலைக்குட்டி

  By dn  |   Published on : 13th December 2014 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நகரில் ஒன்றரை அடி நீள முதலைக்குட்டியை வனத் துறையினர் பிடித்தனர்.

  சிதம்பரம் நகரில் தில்லைக்காளியம்மன் கோயில் பின்புறம் உள்ள பாசிமுத்தான் ஓடை கரையில் வெள்ளிக்கிழமை காலை ஒன்றரை அடி நீள முதலைக்குட்டி ஒன்று படுத்து இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் வனக்காவலர்கள் சென்று முதலைக்குட்டியைப் பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai