சுடச்சுட

  

  காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஜனவரி 1}ஆம் தேதி ராணுவத்துக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  இந்திய ராணுவத்துக்கு ஆள்கள் தேர்வு செய்யும் பணி 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

  இதில் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் கலந்துகொள்ளலாம்.

  அவர்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அதில் தெரிவிக்

  கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai