சுடச்சுட

  

  திட்டக்குடி கோயிலில் கோ பூஜை: குருஜி ராம்குமார் சுவாமிகள் பங்கேற்பு

  By dn  |   Published on : 13th December 2014 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலில், எளம்பலூர் பிரம்மரிஷி மகாசித்தர் டிரஸ்ட் சார்பில் கோமாதா பூஜை மற்றும் லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இக்கோயிலில் ஜனவரி  26-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திருப்பணிக்காக பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் மகாசித்தர் டிரஸ்ட் தலைவர் குருஜி ராம்குமார் சுவாமிகள் ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார்.

  குடமுழுக்கை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அருந்ததி வார வழிபாட்டு மன்றம், மகாசித்தர் டிரஸ்ட் மற்றும் கோயில் சிவனடியார்கள் சார்பில் கோமாதா பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. குருஜி ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில், தண்டபாணி, வைத்தியநாதன், செந்தில் உள்ளிட்ட வேத விற்பனர்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.

  தொடர்ந்து கோயில் வளாகத்தில் அருந்ததி வார வழிபாட்டு மன்றத்தினர் நாடு நலம் பெற வேண்டியும், மழை பொழிய வேண்டியும், கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற வேண்டியும் கார்த்திகை மாதம் முழுவதும் 1,008 முறை வலம் வரும் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai