சுடச்சுட

  

  விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கு உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

  மங்களூர் துறைமுகத்திலிருந்து 42 பெட்டிகளில் 2,655 டன் யூரியா உர மூட்டைகள் திருச்சி வழியாக விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது, திருச்சி ரயில்வே யார்டில் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

  இந்நிலையில் தடம் புரண்ட பெட்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு மீதமுள்ள பெட்டிகளில் இருந்த உர மூட்டைகள் விருந்தாசலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தன. இதில், கடலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 1,000 டன் யூரியா மூட்டைகளும், விழுப்புரம் மாவட்டத்துக்கு 1,000 டன் யூரியா மூட்டைகளும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 500 டன் யூரியா மூட்டைகளும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai