சுடச்சுட

    

    நாகை திமுக பிரமுகர் கொலை வழக்கு: கடலூர் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

    By dn  |   Published on : 13th December 2014 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினத்தில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 3 பேர் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

    நாகப்பட்டினம் நகராட்சி, 29-வது வட்ட திமுக செயலர் மூவேந்தன் வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாகப்பட்டினம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இக்கொலை வழக்குத் தொடர்பாக நாகப்பட்டினம் அக்கரைக் கிராமத்தைச் சேர்ந்த முனி என்ற முனீஸ்வரன்(33), கீழ்க்கரையைச் சேர்ந்த ஜெட்லி என்ற பழனிவேல்(25), நாகை நிலா வடக்கு வீதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (27) ஆகியோர் வெள்ளிக்கிழமை கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.3 நீதிபதி புகழேந்தி முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai