சுடச்சுட

    

    பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணி: போக்குவரத்து வழித்தடம் மாற்றம்

    By dn  |   Published on : 13th December 2014 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியினை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா தெரிவித்தார்.

    இதுகுறித்து கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரம் வழியாக விக்கிரவாண்டி-கும்பகோணம்- தஞ்சாவூர் வழித்தடத்தில் பண்ருட்டி ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    எனவே இவ்வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    அதன்படி சென்னை, விழுப்புரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் விக்கிரவாண்டி-கும்பகோணம் வழித்தடத்தில் ராசாப்பாளையம், மாளிகைமேடு, மேல்பட்டாம்பாக்கம் வழியாக வந்து பண்ருட்டி நகரின் லிங்க் ரோடு வழியாக கும்பகோணம் செல்ல வேண்டும்.

    கும்பகோணத்திலிருந்து விழுப்புரம், சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் பண்ருட்டி நகரை அடையும்போது பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகிலுள்ள (இடதுபுறம் உள்ள) மாற்றுப்பாதை வழியாக தட்டாஞ்சாவடி, வீரப்பெருமாநல்லூர், மடப்பட்டு வழியாகச் சென்று தேசிய நெடுஞ்சாலையினை அடைந்து சென்னை செல்லலாம்.

    இப்பாதை மீண்டும் வரும் 15-ஆம் தேதி முதல் செயல்பட்டுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai