சுடச்சுட

  

  தமிழர்களின் முக்கியத் திருவிழாவான பொங்கல் விரைவில் வரவுள்ள நிலையில், விருத்தாசலத்தில் புதுப்பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

  தமிழர்களின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் பொங்கல் திருநாளாகவும், இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாகவும், 3-ம் நாள் உழவர் திருநாளாகவும் காலம்காலமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  இதில் முதல் நாள் விழாவில் சூரியனுக்கும், இரண்டாம் நாள் தங்களுக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவற்றை வழிபட்டும் வருகின்றனர்.

  "தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் பழமொழிக்கு ஏற்ப, கிராமம் முதல் நகரம் வரையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வீடுகளை தூய்மைபடுத்தி, புதுவண்ணம் பூசி பொங்கல் திருநாளை வரவேற்பர். அதேபோல் பொங்கல் வைப்பதற்கு புதுப்பானைகளை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர்.

  புதுப்பானையில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்புகளை கதிரவனுக்கும், மாடுகளுக்கும் வைத்து வழிபடுவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  இந்நிலையில், பொங்கல் திருநாள் விரைவில் வர இருப்பதால், விருத்தாசலம் அய்யனார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பொங்கல் பானைகள், அடுப்புகளை தயாரித்து வருகின்றனர்.

  இதுகுறித்து பானைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ப.கலியன்(70) கூறியதாவது: பொங்கலுக்காக தற்போது அதிகளவில் பானைகள், சட்டிகள், ஒற்றை அடுப்பு, இரட்டை அடுப்பை செய்து வருகிறோம். பானைகள் ரூ.20 முதல் 50 வரை விற்பனை செய்யப்படும். அடுப்புகள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும். அடுப்பு செய்வதற்கு, களிமண், வைக்கோல் கூளம் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து குழப்பி இரண்டு நாள்களுக்கு ஊரவைப்போம். பின் அவற்றால் அடுப்புகளை செய்து, சிவப்பு நிறம் வருவதற்காக செம்மண்ணை கரைத்து அடுப்பில் பூசுவோம். இதன்பின்னர், நெருப்பு மூட்டி அடுப்பை சுடுவோம். இப்படி கடினப்பட்டு செய்யும் பொருள்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பில்லை. இது குடும்பத் தொழில் என்பதாலும், பிறரிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும்,

  இந்தத் தொழிலை 60 ஆண்டுகளாக செய்து வருகிறேன்

  எனத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai