சுடச்சுட

  

  வேப்பூரில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயி வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

  அரியலூர் மாவட்டம், அழகாபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் திருமூர்த்தி(20). வேப்பூரில் உள்ள பச்சமுத்து என்பவர் வயலில் பருத்தி எடுக்கும் வேலையில் சக தொழிலாளர்களுடன் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.

  இதுகுறித்து ரவி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சுப்புராயுலு, உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருமூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமூர்த்தி உயிரிழந்ததுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai