Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் வட்டக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் வட்டக்குழுக் கூட்டம்

    By dn  |   Published on : 13th December 2014 07:15 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    விருத்தாசலத்தில் உள்ள இக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். வட்டச் செயலர் அசோகன், வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நெய்வேலியில் நடைபெறும் 21-வது மாவட்ட மாநாடு பேரணிக்கு விருத்தாசலம் வட்டாரத்திலிருந்து 1,000 பேரை திரட்டிச்செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து ஏழை மாணவர்கள் 60 பேருக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஆறுமுகம் மற்றும் பொறியாளர் ராஜசேகர் ஆகியோர் இலவச சீருடைகள் வழங்கினர்.

    கூட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர்கள் கொளஞ்சிநாதன், குமரகுரு, அமிர்தலிங்கம், அம்பேத்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai