சுடச்சுட

    

    நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம் ராஜகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி உஷாராணி (15) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு, கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழகத் தலைவர் எல்.ராமச்சந்திரன், சிதம்பரம் கோயில் நகர அரிமா சங்கத் தலைவர் கே.விஜயகாந்த், செயலர் ஏ.பிரபாகர், பொருளாளர் கே.சீனுவாசன்,

    அரிமா சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai