சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், கட்டுமன்னார்கோயில் பகுதியிலுள்ள வெள்ளாறில் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை 4 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

  காட்டுமன்னார்கோயில் வட்டம், காவாலகுடி, சாந்திநகர், கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

  வெள்ளாறில் கடந்த 15 ஆண்டுகளாக மணல் குவாரி இயங்கி வருகிறது. குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு 100 அடிக்கும் கீழே நீர் மட்டம் வறண்டு விட்டது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரும் உப்பு நீராகி விட்டது.

  இக்குவாரியால் சாலைகள் மிகவும் சேதமடைந்ததோடு, ஏராளமான விபத்துகளும் நடந்து வருகின்றன.

  ஆற்றின் கரையோரம் 15 அடி முதல் 20 அடி வரையில் மணல் அள்ளப்படுவதால் வெள்ள காலத்தின் போது கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இதன் விளைவாக கடந்த 9-ஆம் தேதி குவாரி செயல்படாமல் நிறுத்தப்பட்டது.

  இவ்வாறு நிறுத்தப்பட்ட குவாரி தொடர்ந்து செயல்படாமல் இருக்க ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு,

  விவசாயம் மற்றும் நிலத்தடி நீரைக் காக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai