Enable Javscript for better performance
ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்

    By விருத்தாசலம்,  |   Published on : 14th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள கருத்தாய்வு மைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் அடைவு குறித்தும், தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய உடற்பயிற்சி- உள்ளரங்க பாரம்பரிய விளையாட்டுகள் எனும் தலைப்புகளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டது.

    ஆசிரியர் பயிற்றுநர் புனிதா மேற்பார்வையில், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கருத்தாளர்கள் மகேஷ்வரி, உமா, மோசஸ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தனர். கூட்டத்தில், தொடக்க வகுப்புகளில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்களும், உயர் தொடக்க வகுப்பில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 52 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai