சுடச்சுட

  

  சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில், ஆறுமுகநாவலரின் 135ஆவது ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  பள்ளிக்குழுத் தலைவர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் ஜி.நடராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வ.ஞானப்பிரகாசம் ஆறுமுகநாவலரின் பெருமைகளை எடுத்துரைத்தார். முன்னாள் மாணவர் ராமசுப்பிரமணியன் நாவலர் கீர்த்தனை மற்றும் பாலபாடம் ஆகியவற்றை பாடினார்.

  சைவ வினா-விடை மற்றும் பாலபாடம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

  குருபூஜையை முன்னிட்டு சனிக்கிழமை காலை ஞானப்பிரகாசர் தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் கோயிலில் உள்ள நாவலர் உருவச்சிலைக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. பின்னர் நாவலர் உருவச்சிலை நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai