சுடச்சுட

  

  தமிழக அரசின் விலையில்லா மாடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்யக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமாரி பழமலை. இந்த ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மாடு வழங்கும் திட்டத்தின் வெள்ளிக்கிழமை கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

  ஆனால், தகுதியுள்ள நபர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கப்படவில்லையெனக் கூறிய அக்கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகுதியுள்ள, வறுமை கோட்டிற்கும் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும், கறவை மாடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறினர். அப்போது கிராம மக்களுக்கும் சிலருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் பழமலை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  தகவலறிந்த பெண்ணாடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆசைத்தம்பி மற்றும் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக பழமலை பெண்ணாடம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அதே ஊரைச் சேர்ந்த ராசாங்கம் (55) மருதமுத்து (60) சுரேந்திரன் (40) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai