சுடச்சுட

  

  கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.

  மக்கள் தரிசனம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், சனிக்கிழமை விழுப்புரத்தை அடுத்துள்ள கோலியனூர் வந்தார்.

  அங்குள்ள நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.

  பின்னர், செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலம் என்பதையே மறந்து விட்டனர். அவர்கள் தமிழக மீனவர்களை, இந்திய மீனவர்களாகக் கருதுவதில்லை.

  தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தனிக் குழு அமைக்க வேண்டும். இலங்கையிடம் கச்சத் தீவை தாரை வார்த்தது மிகப்பெரிய தவறு. கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  கடலூர்: பின்னர் கடலூர் மாவட்டத்துக்கு வந்த சரத்குமாருக்கு, மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

  அப்போது செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரையைத்தான் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் மானியம் அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

  பால் விலையை குறைக்கக் கோரி மனு அளித்துள்ளோம். உயர்த்தப்பட்ட பால் விலையில் உற்பத்தியாளர்களுக்கு ரூ.8 சேர்ந்துள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai