சுடச்சுட

  

  கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைக்கக் கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 14th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுவை அனைத்து கட்டடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

  தமிழக முதல்வர் மற்றும் கடலூர் ஆட்சியரிடம் தமிழ்நாடு மற்றும் புதுவை அனைத்து கட்டடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அண்மையில் அளித்த மனு:

  லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கட்டுமானத் துறை வரன்முறைப்படுத்தப்படாமல் அனைவரும் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி தொழில்நுட்பக் கல்வித் தகுதி பெற்றவர்கள் கவுன்சிலில் பதிவு செய்து அதன் பின்னரே கட்டுமானத் தொழிலில் ஈடுபட வேண்டுமென்ற நிலை உருவாக வேண்டும்.

  அப்போது தான் நாட்டில் தரமான கட்டடங்கள் உருவாகும். தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும்.

  மருத்துவத் துறை, சட்டத் துறைக்கு தனியாக கவுன்சில் உருவாக்கியது போன்று கட்டடத் துறையிலும் தனியாக கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai