சுடச்சுட

    

    கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் கடலூர்-விழுப்புரம் அணிகள்

    By கடலூர்,  |   Published on : 14th December 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம், புதுவை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகள் அளவிலான கூடைப்பந்து போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளை கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார்.

    இதில், கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக், வடலூர் விவேகானந்தா பாலிடெக்னிக், நாகப்பட்டினம் வள்ளிவலம் தேசிகன் பாலிடெக்னிக், தூத்தூர் ஸ்ரீனிவாஸா பாலிடெக்னிக், காரைக்கால் பாலிடெக்னிக், விழுப்புரம் சூர்யா பாலிடெக்னிக், ஏழுமலை பாலிடெக்னிக், மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடின.

    நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி பாலிடெக்னிக், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஞாயிற்றுக்கிழமை (டிச.14) நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் எஸ்.அருணகிரி செய்திருந்தார். போட்டியின் நடுவர்களாக பி.செல்வராஜ், டி.மீனாட்சிசுந்தரம், எஸ்.செங்குட்டுவன், கே.தர்மராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai