சுடச்சுட

  

  கடலூர் கல்லூரிப் பேராசிரியை இடமாற்றம் விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் கடலூரில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேராசிரியை பி. சாந்தியை அறக்கட்டளை நிர்வாகம் நவ.26-ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்தது. இதனைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  இந்நிலையில், பேராசிரியைக்கு ஆதரவாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவிகள் சனிக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியரகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலர் எம். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத் தலைவர் டி.அரசன், செயலர் சுனில்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  பேராசிரியை பி.சாந்தியின் பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், தற்போதைய கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த

  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai