சுடச்சுட

  

  கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 45% நிறைவு

  By கடலூர்,  |   Published on : 14th December 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொள்ளிடம் ஆறு கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத், துறை அலுவலர்களுடன் சனிக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

  கடலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில், கடலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகள், கொள்ளிடம் ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார். கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், ரூ.65.14 கோடி மதிப்பிலான புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  அதேப் போன்று, கடலூர் நகராட்சி, புவனகிரி, பரங்கிப் பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 812 கிராம குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் ஆற்று நீரினை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.260 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தற்போது திட்டப் பணிகள் 45 விழுக்காடு முடிவடைந்த நிலையில் இத்திட்டத்தை விரைவில் முடித்திட மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

  கூட்டத்தில், கடலூர் நகர் மன்ற தலைவர் ஆர்.குமரன், மேற்பார்வை பொறியாளர் (பாதாள சாக்கடை திட்டம்) அன்பழகன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஏ.செல்லக்கண்ணு, கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பொன்.செல்வன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜிஜாபாய் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai