சுடச்சுட

  

  திட்டக்குடி அடுத்த கொரக்கைவாடியில் சாலை வசதி கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி கிராமத்தில் சாலை வசதி, தெருக்களில் மின் விளக்கு, சாலை அமைத்து தரவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜயநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொரக்கைவாடி கிராமத்தில் போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த சாலைகளில் நாற்றுகளை நட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  போராட்டத்துக்கு வட்டச் செயலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச் செயலர் கொரக்கைவாடி பாண்டியன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai