சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே குமராட்சியில் பழுதடைந்த பாலத்தை பழுதுநீக்கியும், விரைவில் புதிய பாலம் கட்டக்கோரியும் வர்த்தக சங்கம், மோட்டார் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சனிக்கிழமை கடை அடைப்பு மற்றும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

  சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி கான்சாகிப் வாய்க்கால் பாலம், இளநாங்கூர் பாலம் ஆகிய இரு பழமை வாய்ந்த பாலங்கள் உள்ளன. இவை வலிவிழந்துவிட்டன. இப்பாலங்கள் சீரமைப்புப் பணியை தொடங்குவதாகக் கூறி கடந்த 2 மாதங்களாக குமராட்சி வழியாக பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. பேருந்துகள் குமராட்சி வழியை தவிர்த்து காட்டுமன்னார்கோவிலுக்கு கந்தகுமாரன், நெடுஞ்சேரி, புத்தூர் வழியாக செல்கின்றன. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் சீரமைக்கும் பணியை இன்னும் தொடங்கவில்லை. இதனால் குமராட்சி பகுதியில் உள்ள அனைத்த தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  எனவே பாலங்கள் சீரமைப்புப் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்றும், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்றும் குமராட்சியில் வர்த்தகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சனிக்கிழமை கடைஅடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனால் குமராட்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

  போராட்டத்துக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் டி. சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். செயலாளர் என்.வி.நாதன் வரவேற்றார்.

  சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் ராம. ஆதிமூலம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க .செல்லப்பன், பி.கோவிந்தராஜூலு, எஸ்.மணிவண்ணன், எஸ்.துரைசிங்கம், சி.பாண்டிதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். காட்டுமன்னார் கோவியில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். சீனுவாசநாராயணன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai