சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறகிழந்தநல்லூர் கிராமச் சாலை போக்குவரத்துக்கு

  பயனற்ற நிலையில் காணப்படுகிறது.

  வீராணம் ஏரியில் இருந்து மழைக் காலங்களில் உபரிநீர் வெளியேறும் வெள்ளியங்கால் ஓடை, சிறகிழந்தநல்லூர் கிராமத்துக்கு அருகே உள்ளது. இந்த ஓடையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் தடுப்பு கம்பிகள் இல்லாமல் பாதுகாப்பின்றி இருந்தது. ஆண்டுதோறும் மழைக்காலத்தின் போது நடைபாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலை இருந்து வந்தது.

  இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2012ஆம் ஆண்டு சுமார் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தைத் தொடர்ந்து பல லட்சம் செலவில் இணைப்புச் சாலையும் அமைக்கப்பட்டது.

  கட்டுமானப்பணி முடிந்து பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையில், அதனை ஒட்டி அமைக்கப்பட்ட இணைப்புச் சாலை பல இடங்களில் உள்வாங்கி பெரும் பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது.

  இதனால் அச்சாலை வழியாக வாகனங்களில் பொதுமக்கள் சென்று வர கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இணைப்புச் சாலை குறுகியதாக உள்ளதால், எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாலம் திறக்கப்படுவதற்கு முன்பு சிறகிழந்தநல்லூர் சாலையை அகலப்படுத்தி, புதிய தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

  விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai