சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி தொழுதூர், கீழசெருவாயில் 54 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வானம் மேக மூட்டத்துடனும், சில இடங்களில் மழையும் பெய்து வந்தது. இதனால், மாவட்டத்தில் குளிர்ச்சியான கால நிலை நிலவி வந்தது.

    சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவாகியிருந்த மழையளவு (மில்லி மீட்டரில்) சிதம்பரம் 8.20, கடலூர்,1.60, பரங்கிப்பேட்டை 5, காட்டுமன்னார்கோயில் 13, ஸ்ரீமுஷ்ணம் 12, விருத்தாசலம் 22.50, கொத்தவாச்சேரி 10, அண்ணாமலைநகர் 4.50, சேத்தியாதோப்பு 22.20, புவனகிரி 16, லால்பேட்டை 32, மீ.மாத்தூர் 12, காட்டுமயிலூர் 6, வேப்பூர் 4, குப்பநத்தம் 26.20, லாக்கூர் 25.20, பாலந்துறை 15 மில்லி மீட்டர் பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து சனிக்கிழமையும் கடலூர் உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai