சுடச்சுட

  

  மானியத்தில் வேளாண் கருவிகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

  By கடலூர்,  |   Published on : 14th December 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மானியத்துடன் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  பழங்குடியின, பட்டியல் இன விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க குறைந்தபட்ச மானியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 69.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  அதேபோன்று சிறு, குறு விவசாயிகள், பெண்கள் விவசாயிகளுக்கு மனித சக்தியால் இயங்கும் கருவிகள் முதல் நெல் நடவு இயந்திரம் வரையில் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. இப்பிரிவினருக்கு ரூ. 1.35 கோடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்ட விவசாயிகள் கடலூர், சின்னகங்கணாங்குப்பம், பாண்டிசாலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டம் விவசாயிகள் சிதம்பரம், 446ஏ பள்ளிப்படையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்ட விவசாயிகள் விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் சிதம்பரம் சாலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai