சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் ஒழிப்பதற்காக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், தொலைபேசி மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

  அசுத்த நீரில் உண்டாகும் கியூலக்ஸ் கொசுக்கள் கடிப்பதால், பைலேரியா ஒட்டுண்ணி மனித உடலில் நுழைந்து யானைக்கால் நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோய் கொசுக்கள் மூலம் மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது. இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தான டி.இ.சி. மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

  இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக தொலைபேசி வழியாக அவர் பொதுமக்களை தொடர்பு கொள்கிறார். தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், தங்களது தொலைபேசியை பயன்படுத்துவதற்காக எடுத்தால், அதில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரின் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.

  "நான் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பேசுகிறேன். டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்படும் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு கடலூரை யானைக்கால் நோயற்ற மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம்' என்று அந்த பதிவு குரல் தெரிவிக்கிறது.

  கடலூர் மாவட்டத்தில் டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் மாத்திரைகள் இன்று (டிச.14) முதல் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் சுமார் 24.50 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கும் பணியில் பயிற்சி பெற்ற 11,575 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்களது முன்னிலையில் பொதுமக்கள் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

  யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம் கடலூர் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முதலில் பரிசோதனை அடிப்படையில் 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai