Enable Javscript for better performance
ரூ.33.50 லட்சம் முந்திரி பருப்பு மாயம்: 7 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.33.50 லட்சம் முந்திரி பருப்பு மாயம்: 7 பேர் மீது வழக்கு

    By பண்ருட்டி  |   Published on : 14th December 2014 03:27 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட சுமார் ரூ. 33.50 லட்சம் மதிப்புள்ள 296 முந்திரி பருப்பு டின்கள் மாயமானது தொடர்பாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (34). இவர் முந்திரி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து கடந்த 16.11.2014 அன்று மலேசியாவுக்கு 700 பெட்டி முந்திரி பருப்புகளை அனுப்பியுள்ளனர். இதில் 196 பெட்டிகளை காணவில்லை எனவும், 23.11.2014 அன்று சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக 425 பெட்டிகள் அனுப்பியதில் 100 பெட்டிகளை காணவில்லை எனவும், லாரி உரிமையாளர் அமர்நாத், ஓட்டுநர் ராம், குமார், அசோக், ஆசிஸ், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் திருடி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai