Enable Javscript for better performance
வளர்ச்சிப் பணிகள்: கோட்டாட்சியர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    வளர்ச்சிப் பணிகள்: கோட்டாட்சியர் ஆலோசனை

    By விருத்தாசலம்,  |   Published on : 14th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலத்தில் நகர வளர்ச்சி மற்றும் அழகு படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் ப.அருளழகன், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைப்பது. பேருந்து நிலையம், பாலக்கரை மற்றும் கடைவீதி பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பொருத்துவது. குப்பநத்தம்- உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பணியை விரைந்து முடிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் ஸ்ரீதர், மின்துறை அலுவலர் அருள், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வணிகர் சங்க நிர்வாகிகள், அரிமா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai