சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் விதி மீறலில் ஈடுபட்ட 535 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து கூறியதாவது: கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 1625 வாகனங்கள் வட்டார போக்குவரத்துத் துறையினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 535 வாகன ஓட்டிகள் அதிவேகம், தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதது, தகுதிச்சான்று, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விதி மீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.20.27 லட்சம் அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்பட்டது.

  குடிபோதையில் வாகனம் ஓட்டிய 4 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, விபத்து உயிரிழப்புகளில் தொடர்புடைய 33 பேரின் ஓட்டுநர் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai