Enable Javscript for better performance
ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

    By பண்ருட்டி  |   Published on : 15th December 2014 03:33 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர்.

    பண்ருட்டி வட்டம், பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவி (32), சோமு மனைவி கிரிஜா (25), அன்பு மனைவி கல்பனா (28). இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது ஆட்டோவில் வடலூர் வள்ளலார் கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பணிக்கன்குப்பம் அருகே வரும்போது குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ ஓட்டுநர் சாமிநாதன் பிரேக் பிடித்ததில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காடாம்புலியூர் போலீஸார்

    விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai