சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம், மத்திய அரசு வேளாண் அமைச்சகம், தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

  பரங்கிப்பேட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் கடந்த டிசம்பர் 8 முதல் 13-ம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியை பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் எம்.எஸ்.முகமதுயூனூஸ் தொடங்கி வைத்தார். ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் ஆர்.இளங்கோவன் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சியின் நோக்கம் மற்றும் பயிற்சியில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்.

  டாக்டர் கே.அம்பலவாணன் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளித்தார். பயிற்சியாளர் எஸ்.அருள்குமார், என்.ராமராஜன் ஆகியோர் தென்னை மரம் ஏறும் உபகரணம் மூலம் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.

  வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தென்னைநாற்றங்கால் அமைக்கும் முறைகள், ரகங்கள் மற்றும் தென்னை வளருவதற்கான பருவ நிலைகள், நோய் மேலாண்மை குறித்து விளக்கமளித்தார்.

  வேளாண் துணை இயக்குநர் ஆர்.திருஞானம் அரசு நலத் திட்டம் குறித்துப் பேசினார்.

  பயிற்சி பங்கேற்ற இளைஞர்களுக்கு விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தென்னை மரங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தில் முனைவர் எம்.மலர்கொடி, கே.வெங்கடலட்சுமி, எம்.சந்திரசேகரன் ஆகியோர் எளிய முறையில் குறும்படம் மூலமாக விளக்கமளித்தனர். தென்னை மரம் ஏறும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள் அருண்தேவன், ஸ்ரீகாந்த்

  ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai