Enable Javscript for better performance
கிரானைட் வெட்டி எடுப்பு: 3 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் வெட்டி எடுப்பு: 3 பேர் மீது வழக்கு

    By விருத்தாசலம்,  |   Published on : 15th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக 3 பேர் மீது மங்கலம்பேட்டை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்ததாவது: விருத்தாசலத்தை அடுத்த மு.புதூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (33). இவருக்கு அதே பகுதியில் 42 சென்ட் நிலம் உள்ளது. இதனருகே, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார் சோர்டியா என்பவருக்குச் சொந்தமான நிலம் இருப்பதாகத் தெரிகிறது.

    இந்நிலையில், இந்த நிலத்தில் அசோக்குமார் சோரடியா, சென்னை, செளகார்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித்மல் சோர்டியா, இந்திராபாய் சோர்டியா ஆகிய மூவரும் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தனராம். அப்போது, அருகிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்தும் கிரானைட் வெட்டி எடுத்ததாக, தியாகராஜன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai