Enable Javscript for better performance
கூட்டுறவு சங்க நிர்வாகிக்கு மிரட்டல்: ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்க நிர்வாகிக்கு மிரட்டல்: ஊழியர் கைது

    By விருத்தாசலம்  |   Published on : 15th December 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் அருகே கூட்டுறவு கடன் சங்கச் செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்த தரணிதரன் (49) விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர், விற்பனைத் தொகையை தாமதமாக செலுத்தியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை மதுபோதையில் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை எடுக்க முயன்றாராம்.

    அப்போது, இதை கவனித்த கூட்டுறவு கடன் சங்கச் செயலர் சுந்தரபாண்டியன் தடுத்துள்ளார். இதையடுத்து, சுந்தரபாண்டியனுக்கு தரணிதரன் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தரணிதரனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai