சுடச்சுட

  

  ங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

  By கடலூர்,  |   Published on : 15th December 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள் தகவல் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுயதொழில் தொடங்கவும், தங்கத்தின் தரம் பற்றிய விழிப்புணர்வு பெறுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு தங்க நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் என்ற பயிற்சி டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படுகிறது.

  பயிற்சியின் போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்தத் தங்கத்தை கணக்கிடும் முறை, தங்கத்தை உரைகல்லில் உரசி தரம் அறியும் முறை, உரசாமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளைக் கண்டறிதல், வங்கிகளில் நகைக் கடன் வழங்கும் முறை, ஹால்மார்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.

  பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

  இப்பயிற்சி பெற்றவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றவும், அடகுக் கடை, ஆபரணக் கடை, நகை வணிகம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

  மேலும், இப்பயிற்சி சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துகொள்ளலாம். இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்.

  100 மணி நேர பயிற்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிசம்பர் 27-ம் தேதி முதல் பயிற்சியளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் சேர விரும்புவோர் கடலூர் எண்:3, கடற்கரை சாலை, சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

  பயிற்சிக் கட்டணமாக ரூ.3,140 செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-222619 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai