Enable Javscript for better performance
தீக்குளித்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வயிற்று வலி காரணமாக தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    பண்ருட்டி வட்டம், பண்ரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தமிழரசி (37). இவர்களுக்கு 1990-ல்

    திருமணம் நடந்துள்ளது.

    தமிழரசிக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வயிற்று வலி காரணமாக தமிழரசி மண்ணெண்ணைய்யை உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். இதை தடுக்கச் சென்ற முருகனும் தீக் காயம் அடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசி சனிக்கிழமை உயிரிழந்தார். புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai