சுடச்சுட

  

  நாய்த் தொல்லை: நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

  By பண்ருட்டி  |   Published on : 15th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி நகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பண்ருட்டி நகரத் தெருக்களில் மட்டுமன்றி, அரசு அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளிலும் நாய்கள் சுற்றித் திரிவதை காணலாம். இதனால் இப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகிறார்கள்.

  தெருக்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டிக் கொண்டு செல்கின்றன.

  இதனால் பலர் கீழே விழுந்து காயம் அடைவது மட்டுமின்றி நாய் கடிக்கும் ஆளாகின்றனர்.

  தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai