சுடச்சுட

  

  திட்டக்குடி அசனாம்பிகை கோயிலில் நீர்வளம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது.

  திட்டக்குடியில் உள்ள அசனாம்பிகை கோயிலில் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் பெருக வேண்டியும், சுமங்கலிப் பெண்களின் மாங்கல்யம் பலம் பெற வேண்டியும், கார்த்திகை பெண்கள் வார வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

  இதனையடுத்து கோயில் தலைமை குருக்கள் தண்டபாணி தலைமையிலான குழுவினர் லட்சார்ச்சனை நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.

  பூஜையில் எளம்பலூர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள், கார்த்திகை பெண்கள் குழுவினர், திருப்பணிக் குழுவினர் ராஜபிரதாபன், ராஜன், வேணுகோபால்பிள்ளை, பாலசுப்பிரமணியன், கான்ட்ராக்டர் கிருஷ்ணன், ராஜசேகர், சிவக்குமார், கோயில் நிர்வாக அலுவலர் முருகன், தக்கார் சிவஞானம், கணக்கர் ராஜகோபால் மற்றும் அருந்ததி வார வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai