சுடச்சுட

  

  பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் காத்திருப்போர் அறை பயன்பாட்டுக்கு வராததால், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் கும்பகோணம் சாலையில் இயங்கி வருகிறது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மருங்கூர், காடாம்புலியூர் ஆகிய குறுவட்டங்களில் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன.

  இக்கிராம மக்கள் ஜாதி மற்றும் இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல், நிலஅளவை, உதவித்தொகை என பல்வேறு தேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

  அவ்வாறு வந்து செல்லும் மக்களின் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் காத்திருப்பு அறை மற்றும் கழிப்பறைகள் புதிதாக கட்டப்பட்டன. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

  இதனால், பொதுமக்கள் அலுவலத்தின் உள்ளும், வெளியில் உள்ள மரத்தடியிலும் காத்திருக்கும் நிலை உள்ளது.

  கழிப்பறை வசதி இல்லாததால், குறிப்பாக பெண்கள் திறந்த வெளியில் புதர்களுக்கு இடையே சென்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளதால், விஷப் பூச்சிக் கடிக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது.

  எனவே, புதிதாக கட்டப்பட்ட காத்திருப்பு அறை மற்றும் கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai