சுடச்சுட

  

  பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உள்பட இருவர் சாவு

  By கடலூர்  |   Published on : 15th December 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த பெண் உள்ளிட்ட இருவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

  பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ரவி (45), விவசாயி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராமர் மனைவி ராயம்மாள் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற அரசு நகரப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது உரசியது.

  இதில், ரவி, ராயம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, அவர்கள் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai