சுடச்சுட

  

  மக்கள் பங்களிப்பு நிதி ஆட்சியரிடம் ஒப்படைப்பு

  By பண்ருட்டி,  |   Published on : 15th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் கிராம தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள, பொதுமக்களின் பங்களிப்பு நிதி ரூ. 7,61,764 மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.

  எஸ்.பி.டி. துரைசாமி நகரில் 8 அங்குல ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டார் மற்றும் பம்புசெட் அமைக்கவும், 30 ஆயிரம் லிட்டர் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் பம்ப் ரூம் அமைக்கவும், தந்தை பெரியார் நகரில் 100 மீட்டர் தார்ச் சாலை அமைக்கவும், காந்தி நகரில் நற்பவி வித்யாலாயா சாலையில் 390 மீட்டர் தார்ச் சாலை, ஸ்ரீராம் நகர், அசோக் நகரில் தெருவிளக்கு ஆகிய பணிகளை மேற்கொள்ள கிராமங்களில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டது.

  இத்திட்டத்தின் பணிக்கான மொத்த மதிப்பு ரூ. 22,81,830-ல் மூன்றில் ஒரு பங்குத்தொகை ரூ. 7,61,764-க்கான காசோலையை ஊராட்சிமன்றத் தலைவர் கோ.ஜெகன், மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai