சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் வீடு, வீடாகச் சென்று யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வழங்கப்படும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

  யானைக்கால் நோய் ஒழிப்பு பணியாக வீடு, வீடாகச் சென்று டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் மாத்திரைகள் வழங்கும் பணி கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடலூர் நகராட்சி செம்மண்டலத்தில் இப்பணியை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

  அப்போது அவர் கூறியது: யானைக்கால் நோய் பைலேரிய என்ற ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது. இந்நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு கால்களில் லேசான வீக்கம் ஏற்பட்டு சிறிது சிறிதாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகப் பெரியதாகி விடும். யாருடைய உடலிலும் மைக்ரோ பைலேரியா ஒட்டுண்ணி இருப்பது வெளித்தோற்றத்தில் தெரியாது. எனவே, அனைவரும் அரசால் வழங்கப்படும் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

  இம்மாத்திரைகள் 2 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.

  இத்திட்டத்தின் கீழ் 12.50 லட்சம் ஆண்கள், 11.90 லட்சம் பெண்களுக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் அனைவரும் யானைக்கால் நோயை ஒழிக்க டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் மாத்திரையை உட்கொண்டு 2015-ம் ஆண்டை யானைக்கால் நோய் இல்லாத மாவட்டமாக்க வேண்டும் என்றார்.

  நிகழ்ச்சியில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், ஆ.அருண்மொழித்தேவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ஐயப்பன், நகராட்சித் தலைவர் ஆர்.குமரன், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் ஜவகர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரை விநியோகம்.

  பண்ருட்டி

  பண்ருட்டி ஒன்றியம், முத்தாண்டிக்குப்பத்தில் நடைபெற்ற யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்.செல்வகுமார் தலைமை வகித்தார்.

  பண்ருட்டி ஒன்றிய கல்விக்குழுத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தேவநாதன் முன்னிலை வகித்தனர்.

  நெய்வேலி எம்எல்ஏ., எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கமணி குணசேகர், ஜோதிபழனி, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சுகாதார ஆய்வாளர்கள் குமாரவேலு, செந்தில்வளவன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர்.

  விருத்தாசலம்

  விருத்தாசலம் நகராட்சி சார்பில், நகரில் உள்ள 33 வார்டுகளிலும் விருத்தாசலம் நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவர் நாச்சியம்மாள்லாவண்யா தலைமையில் செவிலியர்கள் மற்றும் மகளிர் குழுவினர், தொண்டு நிறுவனங்கள், நகராட்சி ஊழியர்கள் மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

  முன்னதாக, பழமலைநாதர் நகர் பகுதியில் நகர்மன்றத் தலைவர் ப.அருளழகன் தலைமை வகித்து மாத்திரைகள் வழங்குவதை தொடங்கிவைத்தார்.

  நகர்மன்ற துணைத் தலைவர் சந்திரகுமார், அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கராசு, அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai