Enable Javscript for better performance
வங்கிகள் முன் நூதன திருட்டு:திருச்சி இளைஞர் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    வங்கிகள் முன் நூதன திருட்டு:திருச்சி இளைஞர் சிக்கினார்

    By சிதம்பரம்,  |   Published on : 15th December 2014 03:34 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில், வங்கிகள் முன் நூதன முறையில் ரூ.4.5 லட்சம் திருடியதாக, திருச்சி இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம், லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுகத் அலி. இவர், காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் உள்ள வங்கி ஒன்றில், கடந்த மார்ச் 6ஆம் தேதி ரூ.3.5 லட்சம் பணத்தை எடுத்து வந்து, தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அவரது பெட்டியை உடைத்து பணம் முழுதும் திருடப்பட்டது. இதேபோன்று, மே மாதம் கொல்லுமேட்டைச் சேர்ந்த முகமதுபன்சூரிடம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் ரூ.1 லட்சம் திருடு போனது.

    இந்த திருட்டுகள் குறித்து, காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். எஸ்.பி. ஏ.ராதிகா தனிப்படை அமைத்தும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் குற்றவாளிகளை கண்காணிக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சனிக்கிழமை இரவு, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், காட்டுமன்னார்கோவில் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்ற இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுதாகரன் (23) என்பதும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வங்கிகள் முன் நூதன முறையில் ரூ.4.5 லட்சம் திருடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து சுதாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai