சுடச்சுட

  

  கடலூர் மண்டல அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் கடலூர் சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் இரா.மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தொழிற்சங்கம் சார்பான பொது வேலைநிறுத்தத்தை விளக்கி டிசம்பர் 22-ம் தேதி வரை பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

  கூட்டத்தில் தொமுச தலைவர் பி.பழனிவேல், சிஐடியு பொதுச்செயலர் எம்.முத்துக்குமரன், தலைவர் ஜி.பாஸ்கரன், பிடிஎஸ் தலைவர் டி.ஜெய்சங்கர், எல்எல்எஃப் பொதுச்செயலர் எம்.ஞானப்பிரகாசம், டிஎம்டிஎஸ் பொதுச்செயலர் டி.ஆர்.தண்டபாணி, ஐஎன்டியுசி பொதுச்செயலர் பி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai