சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மின் மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்க மாநில பிரசார செயலர் ச.ராமானுஜம் முன்னிலை வகித்தார்.

  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பணியாளர்களை அரசு ஊழியராக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் வீ.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பெ.பச்சையப்பன், எஸ்.கோடி, கி.சுந்தரமூர்த்தி, துணைச் செயலர்கள் இரா.சுசிராஜ், கே.ஏகாம்பரம் மற்றும் கல்வித் துறை துப்புரவுப் பணியாளர்கள் சங்கம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai