சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் தமிழக தமிழாசிரியர் கழகச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில மதிப்பியல் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் விஜயகுமார் செயல் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

    மாணவர்களின் நலன் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அரசாணையை திரும்பப் பெறவேண்டும். திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய நாளாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்திய, தருண் விஜய் எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட

    தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai