சுடச்சுட

  

  திட்டக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை மகனுடன் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திட்டக்குடி பெரியார் நகரில் வசிக்கும் இளவரசன் மனைவி ராஜபிரியா (25). திட்டக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. புகழேந்தி (7) என்ற மகன் உள்ளார். சில தினங்களுக்கு முன் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த ராஜபிரியா பள்ளிக்கு விடுமுறை கடிதம் அளித்துவிட்டு தனது மகனுடன் மாயமானார்.

  மனைவி மகன் காணாமல் போனது குறித்து தெரிந்த இளவரசன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai