Enable Javscript for better performance
பெண் கடத்தல்: இளைஞர் கைது - Dinamani

சுடச்சுட

    

    பெண் கடத்தல்: இளைஞர் கைது

    By கடலூர்  |   Published on : 16th December 2014 03:24 AM  |   அ+அ அ-   |    |  

    வேப்பூர் அருகே கூலித் தொழிலாளியின் மனைவி, குழந்தையை கடத்திச் சென்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் நீலகண்டன். சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இனிதா (22). இவர்களுக்கு மகதி என்ற 8 மாத குழந்தை உள்ளது. கடந்த 7-ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற இனிதாவை காணவில்லை என நீலகண்டன் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்புராயுலு, தலைமைக் காவலர் சக்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இனிதாவை வேப்பூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த த.சங்கர் (30) கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சங்கரை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து திங்கள்கிழமை கைது செய்து இனிதா மற்றும் குழந்தை மகதியை மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai