சுடச்சுட

    

    மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 58 பேர் கைது

    By கடலூர்,  |   Published on : 16th December 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 58 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

    அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியரகம் முன் கருப்பு உடையணிந்து மாவட்டத் தலைவர் சி.மச்சேந்திரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், ஏ.அன்பழகன், கே.ராஜேந்திரன், ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உணவு தயாரிப்புச் செலவு மானியத் தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 58 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai