Enable Javscript for better performance
யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரை வழங்கும் பணி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரை வழங்கும் பணி ஆய்வு

    By கடலூர்,  |   Published on : 16th December 2014 03:22 AM  |   அ+அ அ-   |    |  

    மங்களூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் ஊராட்சிகள் தோறும் வழங்கப்பட்டதா என சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    கடலூர் மாவட்டம் முழுவதும் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் மாத்திரைகள் வழங்கப்பட்டதா என ஆய்வு செய்ய ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவகர்லால் வழிகாட்டுதல்படி, திங்கள்கிழமை மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார சுகாதார அலுவலர் மகேஸ்வரி தலைமையிலும், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையிலும் மாவட்ட முதுநிலை பூச்சியியல் வல்லுநர் பாஸ்கர், வட்டார பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர், மாவட்ட நல கல்வியாளர் மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கிராமம் தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டதா என ஆய்வு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai