சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்திகிராமம், அண்ணாகிராமம் பகுதிகளில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  வடக்குத்து ஊராட்சி, ரோட்டரி கிளப், நெய்வேலி இன்னர்வீல் சங்கம், புட்இன்டியா மெகாமார்ட், ஜெயம் கிளினிக், விநாயகா மெடிக்கல் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் தலைமை வகித்தார்.

  இன்னர்வீல் தலைவர் மணிமேகலை, உஷாதேவி, ரோட்டரி கிளப் தலைவர் டேவிட், செயலர் சடையப்பன், மண்டலத் தலைவர் செல்வராசு, உமாபதி, மருத்துவர்கள் பி.ஜெயச்சந்திரன், முத்துக்குமார், தணிகைவேல், புட்இன்டியா இளங்கோவன், இளஞ்செழியன், தணிகைவேல் உள்ளிட்டோர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai